இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: ஆஸி.க்கு 309 ரன்கள் வெற்றி இலக்கு!

ஆஸி. அணிக்கு 309 ரன்கள் இலக்கு பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

231423

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஷிகர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரோகித் சர்மா, விராத் கோலி இணை சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா இந்தப் போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். 127 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உதவியுடன், 124 ரன்கள் குவித்தார் ரோகித் சர்மா. விராத் கோலி மற்றும் அஜிங்ய ரகானே ஆகியோர் அரை சதம் அடித்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்காட் போலண்ட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top