புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசுபுதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கான பிரிமியம் சுமையை குறைக்கும் வகையில் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளின் காப்பீடு பிரிமியத்துக்கான சுமை குறைக்கப்படுவதோடு, காப்பீடு செய்யப்பட்ட தொகை முழுமையாக, விரைவாக விவசாயிகளுக்குக் கிடைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சில குறைபாடுள்ள தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்துக்கு பதிலாக இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top