பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகக்கோரி உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்!

Srinivasanஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சீனிவாசன் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று வலியுறுத்தியுள்ளது.

பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான முதல் கட்ட விசாரணை அறிக்கையை கடந்த மாதம் முத்கல் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என குரல் கொடுத்தனர். ஆனால் இந்த பதவியில் இருந்து விலக மறுத்து வந்தார் சீனிவாசன்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள். சீனிவாசன் மீது கடுமையாக சாடினர். மேலும் நேர்மையான முறையில் விசாரணை நடக்க வேண்டுமென்றால் சீனிவாசன் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும், மறுக்கும் பட்சத்தில் நாங்களே ஆணை பிறப்பிக்க வேண்டியதாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். சீனிவாசன் பதவி விலகும் வரை அவர் தரப்பு வாதங்கள் எதையும் காது கொடுத்து கேட்கும் நிலையில் நீதிமன்றம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதிகளின் இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து சீனிவாசன் உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top