இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: ரோகித் அபார ஆட்டம்: ஆஸி. அணிக்கு 310 ரன்கள் வெற்றி இலக்கு

Rohit-sharma-1பெர்த் நகரில் நடைபெற்று வரும்முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 310 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மாவும், விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்த ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில், தமது 9-ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

91 ரன்களில் ஃபாக்னரின் பந்துவீச்சில அவர் விக்கெட்டை இழந்தார். இதன்பின்னர் கேப்டன் தோனி 18 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. 162 பந்துகளில் 7 சிக்சர்கள், 13 பவுண்டரிகள் உட்பட 171 ரன்கள் விளாசிய ரோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் இருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top