மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஃபெடரர், முர்ரே 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

roger federerஅமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்திற்கு இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர் மற்றும் நடப்பு சாம்பியனான ஆன்டி முர்ரே ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற இப்போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஃபெடரரும், நெதர்லாந்தின் தீமோ டி பக்கரும் மோதினர். ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தில் ஃபெடரர் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் ஃபெடரர், ஃபிரான்ஸின் ரிச்சர்டு கேஸ்கேவை எதிர்கொள்கிறார்.

இதேபோன்று மற்றொரு ஆட்டத்தில், ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபஸுக்கு எதிராக விளையாடிய பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு தகுதி பெற்றார்.

இதுதவிர, மகளிர் பிரிவு 3-வது சுற்றில் அமெரிக்காவின் மேடிசனை 7-6(7/3), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றிற்கு முன்னேறியுளார் சீனாவின் லீ நா. மேலும் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், ஜப்பானின் கீ நிஷிகோரி, ஃபிரான்ஸின் ரிச்சர்டு கேஸ்கே, சோங்கா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top