சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

us embassy siegeஇலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் தமிழர் எழுச்சி இளைஞர் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், எஸ்.டி.பி.ஐ, தமிழர் விடுதலை கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் கலந்து கொண்டன.

இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், தமிழீழத்திற்கு ஆதரவாகவும் பதாகைகளை பிடித்திருந்தனர்.
மேலும் அனைவரும்,

1. தமிழர்களுக்கு தீர்வு தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பும் சர்வதேச விசாரணையுமே.

2.தமிழீழ விடுதலையை மறுக்கும்,சர்வதேச விசாரணையை தடுக்கும் அமெரிக்க தீர்மானத்தை எதிர்ப்போம்.

3.தமிழர்கள் இணைந்து முன்வைத்திருக்கும், தமிழர் தீர்மானத்தை ஐ.நா.அவையில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

IMG-20140325-WA0003

இதுகுறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறுகையில், இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்குடன் அமெரிக்க அரசு ஐ.நா. மனித உரிமை அமர்வில் தீர்மானத்தை கொண்டுவரவிருக்கிறது. அமெரிக்க அரசு இலங்கைக்கு எதிராக கொண்டுவந்துள்ள இந்த தீர்மானம் உண்மையில் தமிழினத்திற்கு எதிராக நடந்த இனப்படுகொலையை போர்குற்றமாக சித்தரித்து போரில் ஈடுபட்ட ஒரு சில அதிகாரிகளை மட்டும் தண்டித்து சிங்களப் பேரினவாதத்தை காப்பாற்றும் நோக்குடனேயே கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

IMG-20140325-WA0000

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் :-
தமிழீழ விடுதலைப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் இனப்படுகொலை வடிவில் அரங்கேறி ஏறத்தாழ 5 ஆண்டுகள் நிறைவுற உள்ளன. 3 ஆண்டுகளாக அமெரிக்க அரசாங்கம், தமிழர்களுக்கான தீர்வு என்னும் பெயரில் ஒரு போலியான தீர்மானத்தினை முன்வைத்து வருகின்றது.

ஒரு தேசிய இனத்தின் மீது இனவெறியோடு நடத்தப்பட்ட தாக்குதலை, போரை மறுத்திருக்கிறது 2014 அமெரிக்க தீர்மானம், மாறாக அங்கு மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாற்றி இருக்கிறார்கள். இதன்படி சர்வதேச விசாரனை வந்தாலும் அதை இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை போராக வரையறை செய்யமுடியாது என்பதாக பின்னாளில் மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் அமெரிக்காவும், இந்தியாவும் செய்திருக்கிறது.

IMG-20140325-WA0006

மார்ச் 15 அன்று வெளியாகியிருக்கும் அமெரிக்கத் தீர்மானத்தின் இரண்டாம் வரைவு, இன்னும் பாதகமான கருத்துக்களை முன்வைக்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் ராணுவமயமாக்கப்படுவதை வரவேற்பது போல் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மேலும் நேற்று வெளியாகியிருக்கும் வரைவில், ஒருங்கிணைந்த இலங்கை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம் என்று கூறியிருப்பதன் மூலம், தமிழீழம் என்னும் கோரிக்கையை சர்வதேச அளவில் முடக்க முயல்கின்றது. 2009ல் முள்ளிவாய்க்காலில், ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்டது போல், சர்வதேச அளவிலான போராட்டங்களை முடக்கும் முயற்சி இந்தத் தீர்மானமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கைது செய்த போலீசார் அவர்களை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு பின்புறமுள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

IMG-20140325-WA0008


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top