இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

எம்.எஸ்.தோனிஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் பத்திரிக்கையொன்றில், தோனியை இந்து கடவுளைப்போன்று சித்தரித்து படம் வெளியானது. இது இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவதாக விஷ்வ இந்து பரிஷித்தைச் சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த அனந்தபூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மற்றும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top