பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறை முற்றுகை: கு.ராமகிருட்டிணன் அறிவிப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறையை முற்றுகையிடப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.

பேரறிவாளன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 24 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரையும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 161 யை பயன்படுத்தி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ஏழு பேரின் நன்னடத்தையை கருத்தில் கொண்டும், 24 ஆண்டுகள் விடுப்பே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டதை கருதியும், கருணையோடு புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடங்கும் இந்த ஆண்டு ஜனவரி 17 ஆம் நாளை ஒட்டி தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கோருகிறோம்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 10-01-2016 ஞாயிறு காலை 10 மணிக்கு வேலூர் சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top