சென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட ஐஐடி வளாக நேர்காணல் நாளை தொடக்கம்

iit-madras-sசென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.ஐ.டி-யின் வளாக நேர்காணல் மீண்டும் நாளை தொடங்க உள்ளது.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கிய 10 நாள் வளாக நேர்காணல் கடும் மழையால் அன்றுடனே முடிந்தது. ஒரு நாள் வளாக நேர்காணலில் மட்டும் 31 நிறுவனங்களில் இருந்து 117 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

நாளை முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள வளாக நேர்காணலில் மொத்தம் 320 நிறுவனங்கள் பங்குபெற உள்ளதாகவும், 1400 மாணவர்கள் பங்கு பெறுவார்கள் என்றும் ஐ.ஐ.டி-யின் வேலைவாய்ப்பு அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்தார். வகுப்புகளை பாதிக்காத வண்ணம்

நேர்காணலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top