சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியில் வாதாட தடை!

சென்னை உயர் நீதிமன்றம்உயர் நீதிமன்றத்தில் இந்தியில் வாதாட முயன்றவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தமிழில் வாதாடினார்.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த முகுல் சந்த் போத்ரா என்பவர் நடிகை ரோஜா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் மீது செக் மோசடி வழக்கு தொடந்தவர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி சுந்தரேஸ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான முகுல் சந்த், இந்தியில் வாதம் செய்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் இந்தி மொழியில் வாதம் செய்ய அனுமதி கிடையாது  என்று தலைமை நீதிபதி கூறினார். ஆனால் போத்ராவோ, எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாது; எனவே, இந்தியில் பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத்தை பொறுத்தவரை ஆங்கிலத்தில்தான் வாதம் செய்ய வேண்டும் அல்லது இந்த மாநிலத்தின் மொழியான தமிழில் வாதாடலாம். நீங்கள் தமிழில் வாதம் செய்தால் அதை நீதிபதி சுந்தரேஸ் எனக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெரிவிப்பார் என்றார்.

இதையடுத்து போத்ரா தமிழில் வாதம் செய்தார். அப்போது,” கஸ்தூரி ராஜா மீது ‘செக்’ மோசடி வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால் சில தவறுகளை மறைத்து நீதிமன்றத்தி்ல் அவர் தடை உத்தரவு பெற்றுள்ளார். இது சம்பந்தமாக வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்” என்றார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கஸ்தூரி ராஜா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top