பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ்புத்திரனின் அடுத்த படத்தில் பிரபல தமிழ் நடிகர்!

Alphonse-Puthren-About-Premam-Piracy-658x342

2013 ஆம் ஆண்டு தமிழில் நேரம், 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் பிரேமம் ஆகிய இரண்டுபடங்களை இயக்கியிருக்கும் அல்போன்ஸ்புத்திரனின் அடுத்தபடம் பற்றிப் பல்வேறு தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.

அல்போன்ஸ் அடுத்து இந்தியில் படமெடுக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழில் படமெடுக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அடுத்தபடத்தைத் தமிழில்தான் எடுக்கப்போகிறார் என்று சொல்கிறார்கன். அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அருண்விஜய்யை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அருண்விஜய்யோடு மலையாளத்திலிருந்து மம்முட்டி அல்லது மோகன்லால் போன்றொரு பெரியநடிகரும் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பான பேச்சுவார்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் பெரும்பாலும் இதன்படியே நடக்க வாய்ப்பு இருக்கிறதென்றும் சொல்கிறார்கள். என்னைஅறிந்தால் படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் கன்னடப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அருண்விஜய்க்கு இந்தப்படம் பெரிதாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top