இணையதளம் மூலம் வாக்களிக்கும் முறை குஜராத் ஊராட்சித் தேர்தலில் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக, கடந்த 2010-ம் ஆண்டு குஜராத் தில் நடந்த 6 மாநகராட்சித் தேர்த லில் இணையதளம் வழியாக வாக்களிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், மாவட்ட, வட்ட, கிராம பஞ்சாயத்துகளில் இந்த வசதி இல்லை.

இந்நிலையில் இதுகுறித்து மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயந்தி கவாதியா கூறும்போது, “ஊராட்சித் தேர்தலிலும் இணையதளம் மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஊராட்சி தேர்தலில் இணையதளம் மூலம் வாக்களிக்கும் வசதி நாட்டின் பிற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ நடை முறையில் இருக்கிறதா, அங்கு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த தகவல்களை மாநில பஞ்சாயத்து துறை சேகரித்து வருகிறது.

மாநிலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஊரகப் பகுதிகளில் இணையதள தொடர்பு வசதி எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

சமீபத்தில் நடந்த 6 மாநகராட்சித் தேர்தலிலும் 2-வது முறையாக இந்த வசதி வழங்கப்பட்டது. எனினும், மொத்தம் உள்ள 95.9 லட்சம் வாக்காளர்களில் வெறும் 806 பேர் மட்டுமே இணையதளம் வழியாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top