அரசு பொறுப்பிலுள்ள முதலமைச்சர் யாகம் நடத்துவது இந்திய அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானது

3971மக்கள் நலனுக்கான பிரார்த்தனை என்று கூறி தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தியிருப்பது தொடர்பில் சர்ச்சைகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

இரண்டாயிரத்துக்கும் அதிகமான புரோகிதர்கள் பங்கேற்க கடந்த ஐந்து நாட்களாக இந்த ஆயுத சண்டி மஹா யாகம் நடத்தப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் இந்த யாகத்தில் கலந்துகொண்டுள்ளனர். தவிர நாட்டின் முக்கியத் தலைவர்களும் பிரமுகர்களும்கூட பல்வேறு கட்டங்களில் இந்த யாகத்தில் பங்கேற்றுள்ளனர்.

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மேடக் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் யாகம் நடத்திவந்த பந்தலின் ஒரு பாகம் ஞாயிறன்று தீப்பிடித்து எரிந்துவிட்டது.

இச்சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாக தகவல்கள் இல்லை.

அதேநேரம் அரசு பொறுப்பிலுள்ள முதலமைச்சர் ஒருவர் பெரிய அளவில் யாகம் நடத்துவது இந்திய அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

இந்த யாகத்தை நடத்துவதில் பொதுப்பணமும் அரசு இயந்திரமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெலங்கானா மாநில மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

ஆனால் யாகத்துக்கான செலவுகளில் அரசு நிதி சிறிதும் பயன்படுத்தப்படவில்லை என்று சந்திரசேகர ராவ் விளக்கமளித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஒருவர் இப்படி யாகம் நடத்துவது மாநிலத்தின் பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top