வட மாநிலங்களில் இருந்து வீசும் காற்றே ஆந்திரா, தெலுங்கானாவில் கடும் குளிருக்கு காரணம்; சுற்றுசூழல் துறை தகவல்

pplplஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த வாரம் கோடை காலம் போல் வெயில் கொளுத்தியது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. வட தெலுங்கானா வட கடலோர ஆந்திராவில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.

விசாகப்பட்டினம், லம்பாசிங்கியில் 3 டிகிரியும், ஆதிலாபாத்தில் 4 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. மக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தனர்.

‘‘தீக்குள்ளேயே கையை வைத்து விடலாமோ’’ என்று நினைக்கும் அளவுக்கு குளிர் அவர்களை நடுங்க வைத்தது.

இரவு போல் பகல் காட்சி அளிக்கிறது. கடுமையான குளிருக்கு டெல்லி உள்பட வட மாநிலங்களில் இருந்து வீசும் காற்றே காரணம் என்று இந்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்து உள்ளது.

வடமாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது. அங்கிருந்து வேகமாக காற்று வீசுவதால் ஆந்திரா – தெலுங்கானா மாநிலத்தில் குளிர் நிலவுகிறது. இன்னும் 2 நாள் இந்த பருவநிலை நீடிக்கும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top