நெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீன் திட்டமிட்ட கொலை! – நேர்மையான விசாரணை நடத்த பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் டிஜிபியிடம் கோரிக்கை!

sdpiநெல்லை ஏர்வாடி இளைஞர் காஜா முகைதீனின் திட்டமிட்ட கொலை தொடர்பாக, பேரா.ஜவாஹிருல்லா M.L,A எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, , அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் அப்பல்லோ ஹனிபா மற்றும் பல்வேறு இயக்கத் தலைவர்கள் சென்னையில் இன்று தமிழக காவல்துறை டிஜிபி அசோக்குமாரை சந்தித்தனர். அப்போது, தமிழக உளவுத்துறை ஐ.ஜி டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், உளவுத்துறை டி.ஐ.ஜி ஈஸ்வர மூர்த்தி, எஸ்.பி. அருளரசு ஆகியோரும் உடனிருந்தனர்.

mmmநெல்லை ஏர்வாடி பகுதியில் அதிகரித்து வரும் மதவாத சக்திகளின் அச்சுறுத்தல் குறித்தும், காவல்துறையின் மெத்தனப் போக்கு குறித்தும் டிஜிபியிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இளைஞர் காஜா முகைதீன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைந்து கைது செய்து ஏர்வாடி பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டும். விசாரணையை திசை திருப்பும் நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கொலை செய்யப்படவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் டிஜிபியிடம் தலைவர்கள் முறையிட்டனர்.

இந்த சந்திப்பில் தமுமுக, மமக தலைவர்கள் பேரா.ஜவாஹிருல்லா, ஜே.எஸ்.ரிஃபாயி, அப்துல் சமது, மறுமலச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் ஃபரூக், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைத் தலைவர் முனீர், பாப்புலர் ஃப்ரண்டின் ரசாக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே தொடர்ந்து அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர்கள் தொடர்புகொண்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும், நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி வந்த நிலையில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றது.

மேலும் சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு சங்பரிவார அமைப்புகள் தமிழகம் முழுவதும் இதுபோன்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதையும், அதன் ஒருபகுதியாகவே இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது என்றும், ஆகவே, அதற்கான தகுந்த மென்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.

தலைவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த டி.ஜி.பி இரண்டு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்வதாகவும், அதற்கு அவகாசம் தருமாறும் கேட்டுக்கொண்டதோடு காஜா முகைதீன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top