முல்லை பெரியாறு அணையில் மத்திய துணைக்குழு நேரில் ஆய்வு

dc66eb7a-6941-4751-b4a9-9a5eab7e633b_S_secvpfமுல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து கேரளா அரசு அம்மாநில மக்களை பீதி ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டி பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் அணை உடைந்து விடும் என்றும் எனவே அணையில் தேக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என புகார் அளித்தார்.

மேலும் அணையின் குறுக்கே கேரளா சார்பில் புதிய அணை கட்டவும் மனு அளித்தார். ஆனால் கேரள அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு எந்தவித சரியான பதிலும் தரவில்லை. இதனிடையே அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டிய நிலையில் கேரள நீர் பாசன துறை மந்திரி தனது கட்சியினருடன் அணைப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்ததோடு புகைப் படமும் எடுத்துக் கொண்டார்.

கேரள அரசின் இது போன்ற அத்து மீறிய செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என மூவர் குழு தலைவர் நாதனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் முல்லைப் பெரியாறு அணையில் துணைக்குழு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. துணைக்குழு தலைவர் அம்கர்ஜி ஹரிஷ் கிரிஷ் தலைமையில் இன்று ஆய்வுக்கு வருவதாக தெரிவித்தனர்.

ஆனால் தமிழக அதிகாரியான மாதவன் தனக்கு இன்று கோர்ட்டில் வழக்கு இருப்பதால் இந்த ஆய்வை வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தார். ஆனால் திட்டமிட்டபடி துணைக்குழு ஆய்வு நடத்துவது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தமிழக அதிகாரியான மாதவன் வர இயலவில்லை.

இதனையடுத்து துணைக்குழுவில் தமிழக அதிகாரியான சவுந்தரம், கேரள அதிகாரிகளான ஜார்ஜ் டேனியல், பிரசீது ஆகியோர் துணைக்குழு தலைவருடன் சென்று ஆய்வு நடத்தினர். இன்று மாலை நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் தமிழக அதிகாரி மாதவன் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது.

அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 141.30 அடியாக இருந்தது. அணைக்கு 1,636 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. 2,105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. துணைக்குழுவினர் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், மழை அளவு, நீர் கசிவு உள்ளிட்ட விபரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பேபி அணை ஷட்டர் பகுதி கேலரி உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top