ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி

chennai-teamஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப் சிஅணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டங்களில் 4-2 என்ற கோல் விகித அடிப்படையில் முன்னிலை பெற்ற சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் அந்தநகர அணி அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் வெற்றி பெற்றது. 22-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோல் அடித்தது.
சென்னை அணியின் தடுப்பாட்டக்காரர் BERNARD MENDY செய்த தவறை பயன்படுத்தி, LEKIC கோல் அடித்தார். இதன்பின்னர் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் 87-வது நிமிடத்தில் IAN HUME கொல்கத்தா அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார்.
இதன்பின்னர் மூன்றாவது கோல் அடிக்க கொல்கத்தா அணி கடும் முயற்சிகள் எடுக்க, சென்னை அணியில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஃபிக்ரு கோல் அடித்து, கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில், கொல்கத்தா அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் சென்னை அணி மூன்றுக்கு பூஜ்யம் என வெற்றி பெற்றிருந்தது.
இதையடுத்து நான்கிற்கு இரண்டு என்ற கோல்கள் விகித அடிப்படையில் முன்னிலை பெற்ற சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதியாட்டத்தில் கோவா அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடவுள்ளது

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top