பெப்சி நிறுவனத்திற்கு தண்ணீர் வழங்க தடை கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

madurai-benchதாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி நிறுவனத்திற்கு தண்ணீர் வழங்க தடைகோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிருபாகரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தாக்கல் செய்த மனுவில், தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி நிறுவனத்திற்கு தண்ணீர் வழங்க தடை கோரியிருந்தார்.

அவ்வாறு தண்ணீர் வழங்கப்பட்டால், தாமிரபரணி ஆற்றில் நீர் ஆதாரம் எதிர் காலத்தில் பாதிப்பிற்குள்ளாகி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top