நடிகர் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி!

Actor-Sooriதமிழில் திரையுலகில் காமெடியில் கொடிகட்டி பரந்த வடிவேலுவின் வீழ்ச்சியினை பயன்படுத்தி, தனது டைமிங் காமெடிகள் மூலமாகவே முன்னணி காமெடியன் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் நடிகர் சந்தானம்.

‘சேட்டை’ படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று தனது பெயருக்கு முன்னால் தனக்குத்தானே பட்டப்பெயரையும் சூட்டிக்கொண்ட சந்தானத்திற்கு, அதன்பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதும் தோல்வியையே சந்தித்தன. குறிப்பாக, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘இது கதிர்வேலன் காதல்’ என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களே ஊத்திக்கொண்டதால், இப்போது முன்னணி ஹீரோக்களுக்கு சந்தானத்தின் மீதான மோகம் குறைந்து விட்டது.

இப்போது செய்தி என்னவென்றால், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜில்லா’, ‘நிமிர்ந்து நில்’ என பரோட்டா சூரி நடித்து வரும் படங்கள் தொடர்சியாக வெற்றி பெற்றி வருவதால், அவர் பக்கம் ஹீரோக்கள் மட்டுமின்றி டைரக்டர்களும் திரும்பியுள்ளனர். இதயெல்லாம் விட சந்தானத்தின் சம்பளம் ஹீரோக்களையே மிஞ்சும் வகையில் எகிறி நிற்பதும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதனால், ‘அஞ்சான்’ படத்துக்கு சந்தானத்தை புக் பண்ணயிருந்தவர்கள் கடைசி நேரத்தில் பரோட்டா சூரியை புக் பண்ணி விட்டனர். இதன் மூலம் சந்தானத்தின் வாய்ப்பை கைப்பற்றி அவரை பின்னுக்கு தள்ளியிருக்கிறார் சூரி.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top