முல்லைபெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு : கேரளாவுக்கு உபரி நீர் திறப்பு

Mullapperiyardamமுல்லைபெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, 800 கன அடி உபரி நீர் கேரளாவிற்கு திறந்து விடப்பட்டது. நேற்று இரவு முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டம் 141.72 அடியானதை அடுத்து இந்த உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணைக்கு தற்போது நீர்வரத்து இரண்டாயிரத்து900 கன அடியாக உள்ளது. கேரளாவிற்கு உபரி நீர் திறந்து விடுவது தொடர்பாக ஏற்கனவே தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் கேரள மாநில குமுளி மாவட்ட ஆட்சியருக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தமிழகத்துக்கும் முல்லைபெரியாறு அணையில் இருந்து 2100 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top