செம்பரம்பாக்கம் ஏரி பிரச்சினை: பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் – சீதாராம்யெச்சூரி பேட்டி

fbc613a1-fb72-42f5-b008-84cec90cab1a_S_secvpfமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.

வேளச்சேரி தரமணி சென்ற அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு குப்பைக் கழிவுகளை அகற்றும் துப்புரவு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் கல்லுக்குட்டை பகுதியில் மக்களை சந்தித்து வெள்ள பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் வெள்ள நிவாரணம் போதாதாது. வெள்ள நிவாரணம் ஒருங்கிணைப்புடன் சரியாக வழங்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறி உள்ளது. எனவே அரசு இந்த குறையை போக்க வேண்டும்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரே நாளில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட்டதால் ஏற்பட்ட பாதிப்பு பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். இதில் நீதி விசாரணையும் தேவை.

இவ்வாறு சீதாராம்யெச்சூரி கூறினார்.

அவருடன் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உடன் இருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top