இந்தியாவில் முதலாவது புல்லட் ரயில்: இந்தியா, ஜப்பான் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

india-japanஇந்தியா, ஜப்பான் நாடுகள் இடையே அணுசக்தி ஒத்துழைப்பு, புல்லட் ரயில் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் டெல்லியில் கையெழுத்தாகியுள்ளன.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமரும் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.
அப்போது சர்வதேச நிலவரங்கள், இந்தியா, ஜப்பான் இடையே இருதரப்பு உறவு, வர்த்தகக் கூட்டணி உள்ளிட்ட பல விஷயங்களை இருதலைவர்களும் விவாதித்தனர்.
பிறகு, பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் வெளியிட்ட கூட்டறிக்கையில், இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, ராணுவப் பயன்பாட்டுக்கு அல்லாத அணுசக்தித் துறையில் ஒத்துழைக்க இருநாடுகளும் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. இந்தியாவில் முதலாவது புல்லட் ரயில் நெட்வொர்க்கை ஏற்படுத்தும் பணியை ஜப்பான் மேற்கொள்வதற்கான ஒப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
ராணுவத் துறையில் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தத்திலும் இந்தியாவும் ஜப்பானும் கையெழுத்திட்டுள்ளன.
மேலும், அடுத்த ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதியில் இருந்து இந்தியா வரும் ஜப்பானியர்களுக்கு வந்திறங்கியதும் விசா வழங்கும் வசதி அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top