ஏமன் அரசியலில் திடீர் திருப்பம்: ஹவுத்தி போராளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை – ஒருவார போர் நிறுத்தத்துக்கு அதிபர் சம்மதம்

fbadf9ba-0392-4ad1-8178-efd2b9b1a876_S_secvpfஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டின் பேரில் ஹவுத்தி போராளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வசதியாக ஒருவார தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஏமன் அதிபர் சம்மதித்துள்ளார்.

அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அப்த்ரப்போ மன்சூர் ஹாதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.

இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்ட அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்து வருகின்றன.

இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான காலாட்படை வீரர்களும் ஏமனில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சவுதி அரேபிய படைகளுடன், கத்தார், ஜோர்டான், குவைத், பஹ்ரைன், எகிப்து, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 10 நாடுகளின் படைகளும் ஹவுத்தி படையினருக்கு எதிரான இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன.

கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்றுவரும் இந்த உள்நாட்டுப்போரில் அப்பாவி பொதுமக்கள் உள்பட ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் துருக்கி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப்போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் இருதரப்பினருக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது. இதற்கான முதற்கட்ட முயற்சிகளில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இதனையடுத்து, தனது அரசை எதிர்த்து போர் நடத்திவரும் ஹவுத்தி போராளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வசதியாக ஒருவார போர்நிறுத்ததுக்கு அதிபர் அப்த்ரப்போ மன்சூர் ஹாதி சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த தற்காலிக போர் நிறுத்தம் உடனடியாக (டிசம்பர் 7-ம் தேதியில் இருந்து 15-ம் தேதிவரை) அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கி மூனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த ஒருவாரகால போர்நிறுத்தத்துக்கு ஹவுத்தி படையினர் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதை ஏமனில் உள்ள ஐ.நா.சபை தூதர் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த தற்காலிக போர்நிறுத்தத்தை தொடர்ந்து நிரந்தர போர் நிறுத்தத்துக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த தற்காலிக போர்நிறுத்தத்தை மீறுவோர் மீது ஏமன் படைகள் எவ்வித எதிர் நடவடிக்கையிலும் ஈடுபடாத வகையில் எங்களது இந்த அறிவிப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என அப்த்ரப்போ மன்சூர் ஹாதி குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top