வெள்ளத்தால் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு கட்டணமில்லாமல் புதிய பாஸ்போர்ட்

passportசென்னையில் மழை வெள்ள பாதிப்புகளில் பாஸ்போர்ட்டை இழந்தவர்கள், அல்லது சேதமடைந்தவர்கள் 3 மையங்களில் கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அலுவலகங்களில் அணுகி புதிய பாஸ்போர்ட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

சென்னை சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் ஆகிய பாஸ்போர்ட் சேவா மையங்களில் காலை 10 மணி முதல் 5 மணிவரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top