டென்னிஸ் தரவரிசை: 2015-ம் ஆண்டு முழுவதும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜோகோவிச்

94f18477-a340-41ad-a2b4-e2eaf2f0c130_S_secvpfஆண்களுக்கான உலக டென்னிஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் செர்பியாவின் ஜோகோவிச் இந்த வருடம் முழுவதும் முதல் இடத்தை ஆக்கரமித்துக் கொண்டார். அவருக்கு அடுத்த 2-வது இடத்தில் இருக்கும் நபருக்கும் இவருக்கும் இடையில் சுமார் 7500 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.

ஜோகோவிச் 16585 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் முர்ரே 8945 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பெடரர் (சுவிட்சர்லாந்து) 8265 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். வாவ்ரிங்கா 4-வது இடத்திலும், நடால் ஐந்தாவது இடத்திலும், பெர்டிச், டேவிட்ட பெரரர், கெய் நிஷிகோரி, ரிச்சார்ட் காஸ்குயட், ஜோ-வில்பிரைட் டிசோங்கா முறையே 6 முதல் 10 இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஜோகோவிச் கடந்த 2011, 2012, 2014-ம் ஆண்டும் முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஆஸ்திரேலியா, விம்பிள்டன், அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றிருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top