தாய்லாந்து தேர்தல் சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது: நீதிமன்றம் அறிவிப்பு!

yingluck shinawatraதாய்லாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் சட்டவிரோதமானது என்று அந்நாட்டு அரசியல்சாசன நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பால் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் அந்நாட்டு பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு இந்த அறிவிப்பு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி தேர்தலை சட்டவிரோதம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அடுத்து தேர்தல் நடத்துவது குறித்து அரசுடன் ஆலோசனை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் நடைபெற்றபோது பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதனைப் புறக்கணித்தது. மேலும், மக்கள் வாக்களிக்க வராதபடி வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் பாதைகளைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டது. கடந்த 4 மாதங்களாக எதிர்க்கட்சியினர் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அரசு அலுவலகங்களை கைப்பற்றுவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்தில், முன்தாக தப்பியோடிய முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் பிரதிநிதியாக அவரது தங்கை மற்றும் தற்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா செயல்பட்டு வருகிறார் எனவும். எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி எதிர்ப்பாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top