கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை - Regional_metrological_centre_chennaiதென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருக்கிறது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமாரில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top