3 இந்திய படையினரை நேபாள எல்லை பாதுகாப்பு படை கைதுசெய்தது

நேபாள எல்லை பாதுகாப்பு படை, 13 இந்திய ராணுவ வீரர்களை கைது செய்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய-நேபாளம் மற்றும் இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியைப் பாதுகாப்பது இந்திய அரசின் மத்திய பாதுகாப்பு படை சசசுத்திர சீமா பல்(எஸ்.எஸ்.பி.). இந்தியா-நேபாளம் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எஸ்.எஸ்.பி. படையை சேர்ந்த 13 வீரர்களை நேபாள எல்லை பாதுகாப்பு படை கைது செய்து உள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்ட குழுவை நேபாள எல்லை பாதுகாப்பு படை கைது செய்து உள்ளது என்று எஸ்.எஸ்.பி. படையின் டிஜி பி.டி. சர்மா கூறிஉள்ளார். கைதுசெய்யப்பட்ட வீரர்களை பத்திரமாக ஒப்படைக்க எஸ்.எஸ்.பி. மற்றும் நேபாள எல்லை பாதுகாப்பு படை இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கிஷாண்காஞ்ச் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் டீசல் கொள்ளையர்களை இந்திய வீரர்கள் பின்தொடர்ந்த போது இச்சம்பவம் நடைபெற்று உள்ளது என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகிஉள்ளது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top