கடலோர மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்; வானிலை மையம் அறிவிப்பு

201511270506071872_Heavy-to-very-heavy-rain-forecast-for-TN-Puducherry-for_SECVPFஇன்று (வெள்ளிக் கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் இதன் காரணமாக நாளை மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள ஏராளமான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இப்போது அந்த வெள்ளம் வடிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம். அந்த 3 மாதம் பெய்ய வேண்டிய சராசரி மழையின் அளவை இப்போது பெய்தமழை தாண்டி விட்டது.

இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-

நாளை மிக கனமழை

தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை (நேற்று) உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது உருவாகாமல் அப்படியே இருக்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் உருவாகும்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நாளை(சனிக்கிழமை) கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். அதாவது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிக கனமழை பெய்யும்.

செய்யூரில் 7 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரில் 7 செ.மீ. மழையும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 5 செ.மீ. மழையும், காஞ்சீபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தில் 4 செ.மீ. மழையும், கேளம்பாக்கம், செங்கல்பட்டு தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top