பொது விநியோக திட்டம் அமலில் இருப்பதால் உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகம் தவிர அனைத்து மாநிலமும் மார்ச்சுக்குள் அமல்

டெல்லியில் மாநிலங்களின் உணவுத்துறை செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியபின் டெல்லியில் நேற்று பேட்டியளித்த மத்திய உணவுத்துறை அமைச்சர்  கூறியதாவது: நாட்டில் உள்ள 3ல் 2 பங்கு மக்களுக்கு ரூ.1 முதல் ரூ.3 விலையில் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம் வழங்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அமல்படுத்த ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான காலக்கெடு 3 முறை நீட்டிக்கப்பட்டது. இதுவரை 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளன.   ஆந்திராவும், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் அடுத்தமாதம் இச்சட்டத்தை அமல்படுத்துகின்றன. உபி, மேகாலயா, காஷ்மீர், அந்தமான் ஆகியவை வரும் ஜனவரியில் அமல்படுத்துவதாக கூறியுள்ளன.

குஜராத், கேரளா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகியவை வரும் மார்ச் மாதத்துக்குள் அமல்படுத்தவுள்ளன. இச்சட்டத்தை தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றும். பொது விநியோக திட்டம் அமலில் இருப்பதால், இச்சட்டத்தை அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்துவதாக தமிழகம் கூறியுள்ளது. கம்யூட்டர் மயமாக்கும் பணிகள் இன்னும் முடிவடையாததால், உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகளை கண்டறிவதில் சிரமம் உள்ளதாகவும் தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர். உணவு பாதுகாப்புக்கான பணத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் முதல் கட்டமாக புதுச்சேரி மற்றும் சண்டிகரில் அமல்படுத்தப்படுகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top