மாதேசிக்கள் போராட்டம் நேபாளத்தில் தொடர்கிறது; போலீசார் துப்பாக்கி சூடு 2 பேர் பலி, பலர் காயம்

நேபாளத்தின் தென்பகுதியில் முக்கிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மாதேசி போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர்.  பலர் காயமடைந்தனர்.

MATHESIநேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதிய அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்திய எல்லையோரம் வசித்து வரும் மாதேசிகள் தீவிர போராட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சப்தாரி மாவட்டத்தில் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் ஐக்கிய ஜனநாயக மாதேசி முன்னணி அமைப்பினர் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை அடுத்து அவர்களை கலைந்து செல்ல செய்வதற்காக போலீசார் முயன்றனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகள் மற்றும் கற்களை கொண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

அவர்களை நோக்கி போலீசார் பதிலடியாக துப்பாக்கியால் சுட்டனர்.  இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நெடுஞ்சாலையில் வாகன இயக்கத்தை பாதுகாக்கும் வகையில் அந்த பகுதியில் காலவரையறையற்ற முறையில் ஊரடங்கு உத்தரவினை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.  இந்த வன்முறையில் 17 ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் 25 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

5 ஆர்ப்பாட்டக்காரர்களும் 2 போலீசாரும் பலத்த காயமுற்றுள்ளனர்.  போராட்டத்தில் 2,500 பேருக்கும் கூடுதலானோர் ஈடுபட்டனர் என மாவட்ட போலீஸ் அதிகாரி டகால் கூறியுள்ளார்.  இந்த சம்பவத்தினை அடுத்து, நேபாள நாட்டிற்கான சரக்கு பரிமாற்றங்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவை தடைப்பட்டு இந்தோ&நேபாள உறவில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.  நேபாளம் முழுவதும் மாதேசி குழுக்களின் போராட்டத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.MATHESI


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top