உலக டென்னிஸ் இறுதி போட்டியில் ஜோகோவிச்–பெடரர் மோதல்

9cdd0b77-b29a-4597-844f-0c3941bbb11c_S_secvpf‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி உலக டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஒரு அரை இறுதியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா)– ரபெல் நடால் (ஸ்பெயின்) மோதினார்கள்.

இதில் ஜோகோவிச் 6–3, 6–3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

நடால் ‘லீக்’ ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாவ்ரிங்கா, முர்ரே, பெரர் ஆகியோரை வீழ்த்தி இருந்தார். ஆனால் அரை இறுதியில் அவரது ஆட்டம் ஜோகோவிச் முன்பு எடுபடவில்லை.

மற்றொரு அரை இறுதியில் 3–ம் நிலை வீரரான ரோஜர் பெடரர்– வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) மோதினார்கள். இதில் பெடரர் 7–5, 6–3, என்ற நேர்செட் கணக்கில் வென் றார்.

இறுதிப்போட்டியில் ஜோகோவிச் – பெடரர் மோதுகிறார்கள். இந்தப்போட்டி தொடரின் ‘லீக்’ ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி பெடரர் இருந்தார். இதனால் 6 முறை பட்டம் வென்று இருந்த அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.

இருவரும் மோதிய போட்டியில் பெடரர் 22 ஆட்டத்திலும், ஜோகோவிச் 21 ஆட்டத்திலும் வென்றனர். சாம்பியன் பட்டத்துக்காக இருவரும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– ருமேனியாவின் புனோரின் மெர்கா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top