இலங்கையில் ரகசிய சித்திரவதை கூடங்கள் இருப்பதை ஐ.நா உறுதி செய்துள்ளது [வீடியோ இணைப்பு ]

Captureஇலங்கையில் ரகசிய சித்திரவதை கூடங்கள் இருப்பதை ஐ.நா உறுதி செய்துள்ளது. மேலும் இத்தகைய முகாம்கள் இருக்கும் இடங்களை இலங்கை அரசை வெளியிடக் கோரியுள்ளது.

ஐ.நாவின் காணமல் போனவர்கள் பற்றிய குழு (UN WGEID) ”ரகசிய பூமிக்கு அடியிலான சித்திரவதை கூடம்” இலங்கையில் இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் இத்தகைய ரகசிய சித்திரவதைக் கூடங்களைப் பற்றிய தகவல்களை தறுமாறு இலங்கை அரசைக் கோரியுள்ளது.

காணமல் போனவர்கள் பற்றிய ஐ.நாவின் விசாரணைக் குழு தனது இலங்கை பயணத்தை முடித்த பிறகான தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏரியல் டுலிட்சிகி ரகசியசித்திரவதைக் கூடங்கள் 2010லிருந்து உபயோகப்படுத்தி வருகிறார்கள் என்பது அங்கு இரத்தத்தினால் சுவற்றில் எழுதியிருக்கும் தகவல்களின் மூலம் அறிய முடிகிறது என்றார்.

”மீகச் சமீபத்திய காலத்தில் தான் இத்தகைய முகாம்கள் செயல்பட்டுள்ளன்.  2010 ஆண்டு குறிப்பிட்ட தேதிகளைப் அங்கிருந்த சுவர்களில் மிகத் தெளிவாக பார்க்க முடிந்தது. நாங்கள் இதை மிக முக்கியமான விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய விசயமாக பார்க்கிறோம். அங்கு மக்கள் மிக அதிகமான நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்” என்று ஐ.நா அதிகாரி சொன்னார்.

ஐ.நா அதிகாரி இதைப் போன்ற சித்திரவதைக் கூடங்கள் இலங்கை தீவில் மேலும் அதிகமாக இருக்க கூடிய அதிக வாய்ப்புகள்  உள்ளது என்றார்.

டுலிட்சிகி இலங்கையில் இந்த கட்டாய ஆட்கடத்தல் மூலம் காணமல் போனவர்கள் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மிகவும் ஆழமான காயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் இத்தகைய ஆள்கடத்தல்கள் மற்றும் காணமல் போனவர்களில் பலர் யுத்தம் தொடர்பானவைகாளக இருப்பதை காண முடிந்தது என்றார்.

“நாங்கள் ஒரு சிறு துளியைத் தான் வெளிக் கொண்டு வந்திருக்கிறோம், இதைப் போன்ற பல ஆட்கடத்தல் மற்றும் காணப்போனவர்கள் பற்றிய தகவல்கள் பல விசாரணைக் குழுக்களால் பதியப்பட்டுள்ளது. இத்தகைய காணமல் போனவர்கள் சம்பவத்தை மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது, இது ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இதை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நிறுத்தப்பட வேண்டும்.”

மேலும் ஐ.நாவின் காணமல் போனவர்கள் (UNWGEID) பற்றிய குழுவை சந்தித்து சாட்சி கூறிய காணமல் போனவர்களின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

”இவ்வாறு மிரட்டுவது ஜனநாயக சமூகத்தில் எந்தவொரு சமயத்திலும் ஏற்றுக் கொள்ளவியலாது”

டுலிட்சிகி மேலும் இதன் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும். சமூகங்களை ஒன்றிணைப்பது என்பது பாதிக்க்கப்பட்டவர்களுக்கு நியாயம் மற்றும் சுயாதீனமான ஒரு விசாரணையின் மூலமாகவே சாத்தியம் என்றார்.

ஐ.நா குழு UNWGEID இலங்கை அரசை காணமல் போக்கட்டிக்கப்பட்டவர்கள் விசயத்தில் சர்வதேச சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதையும் ரோம் தீர்மானத்தின் கீழும் செயல்படுவதை உறுதிசெய்ய கூறியுள்ளனர்.

மேலும் மொத்தமாக புதைக்கப்பட்ட இடங்களை பற்றி ஐ.நா குழு கூறும் பொழுது, காணமல் போகடிக்கப்பட்டவர்களைப் பற்றிய எந்த ஒரு குழு அமைக்கப்பட்டாலும் அதில் பிணங்களை தோண்டி எடுத்து ஆராயக்கூடிய திறனும் தடவியல் திறன் கொண்டதாகவும் குழு அமைக்கப்பட்டால் தான் முழுமையான விசாரணையை மேற்கொள்ள முடியும்.

”நாங்கள் பிணங்களை தோண்டியெடுத்து ஆராயும் திறன் கொண்ட குழுவாக அமையவேண்டும்” என்று ஐ.நா அதிகாரி கூறினார். ”

இலங்கையின் வட கிழக்கு மாகணங்களில் காணமல் போகடிக்கப்பட்டவர்களின் பலரின் குடும்பங்கள் சர்வதேச விசாரணை தேவை என்று பல போராட்டங்கள் நடத்தியதையும்  ஐ.நா குழுவினர் பார்த்துள்ளனர்.

ரகசிய சித்திரவதை முகாம்கள் செயல்படுவதை நீண்ட நெடிய காலமாக தமிழ் சமூகமும் வடகிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கூறிவந்தனர். மேலும் இந்த வருட ஆரம்பத்தில் இலங்கையின் பிரதம மந்திரி இத்தகைய ரகசிய சித்திரவதை கூடங்கள் இலங்கையில் இல்லை என்று மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top