மியாமி ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா – காரா பிளாக் ஜோடி 2-ம் சுற்றிற்கு தகுதி!

sania mirza cara blackமியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா-காரா பிளாக் ஜோடி 2-ம் சுற்றுக்கு முன்னேறியது.

இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் 5ம் தரநிலையில் உள்ள சானியா மிர்சா(இந்தியா)-காரா பிளாக்(ஜிம்பாப்வே) ஜோடி, தரநிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும் சீன தைபேயின் சிங் சான்-யங்ஜன் சான் ஜோடியை எதிர்கொண்டது.

முதல்செட்டை எளிதாக வென்ற சானியா ஜோடி, கடுமையாகப் போராடியும் இரண்டாம் செட்டை தவற விட்டது. இதனால் 3ம் செட் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. கடும் சவாலாக இருந்த அந்த செட்டை சானியா ஜோடி போராடி கைப்பற்றியது.

இதனால், 6-3, 6-7(8), 10-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற சானியா ஜோடி 2ம் சுற்றுக்கு முன்னேறியது. 2ம் சுற்றில் இந்த ஜோடி, ஜார்ஜியாவின் ஆக்சானா-ரஷ்யாவின் அலிசா ஜோடியை எதிர்கொள்கிறது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் தனது செக் குடியரசு பார்ட்னர் ஸ்டெபானிக்குடன் இணைந்து விளையாடினார். 4ம் தரநிலையில் உள்ள இந்த ஜோடி, அமெரிக்காவின் எரிக் பூடோராக்-ரவேன் கிளாசன் ஜோடியிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top