தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என தகவல்

rain11லட்சத்தீவு அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமைக்கு பிறகு மழையின் அளவு கணிசமாக குறையும் என்றும் வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக குன்னூரில் 13 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆவடி, கேத்தி பகுதிகளில் 12 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி நகர நகர தமிழகத்தில் மழையின் தாக்கம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top