கிழக்கு உக்ரைனில் ராணுவ நடவடிக்கை மெற்கொள்ள மாட்டோம்: ரஷ்யா உறுதி!

russia americaகிழக்கு உக்ரைனில், ரஷியா எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்காது என்று ரஷ்ய ராணுவ மந்திரி சேர்ஜே சோய்கு, அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க ராணுவ மந்திரியுடன் சுமார் ஒரு மணி நேரம் சோர்ஜே சோய்கு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கிரிமியாவில் ரஷிய ராணுவத்தின் செயல்பாடு குறித்த்து அமெரிக்க ராணுவ மந்திரி தனது கவலையை தெரிவித்தார்.

மேலும், அங்கு (கிரிமியா) என்ன நடக்கிறதோ அதற்கு ரஷ்யா படைகள்தான் பொறுப்பு என்பதை உறுதியாக தெரிவித்த அவர், தெற்கு எல்லைப்பகுதியான கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவத்தின் நோக்கம் குறித்து அவர் கேட்டார்.

சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், கிழக்கு உக்ரைனில் ராணுவம் பயிற்சிகள் மட்டுமே நடத்துகின்றனர்.மேலும் எல்லையை கடக்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை பெண்டகன் செய்தி தொடர்பாளர் அட்மிரல் ஜான் கிர்பய் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top