சென்னை புறநகர்ப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 14 ஆயிரம் பேர் மீட்பு

214வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி யால் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இடைவிடாது பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னை நகரைச் சுற்றிலும் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பின. ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக் குள் வெள்ளம் புகுந்தது

தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 வீரர்கள் 5 ரப்பர் படகுகளில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஐ.ஜி. சைலேந்திரபாபு தலைமையில் கடலோர காவல்படையைச் சேர்ந்த 20 நீச்சல் வீரர்கள் உள்பட 70 பேர் 5 பேப்பர் படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.   மீட்பு குழுவினர்ச் எல்லமுடியாத இடங்களில் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.

வேளச்சேரி, மடிப்பாக்கம், திருவொற்றியூர், எண்ணூர் போன்ற புறநகர்ப்பகுதிகளிலும் மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றனர்.
புறநகர்ப்பகுதி முழுவதும் வெள்ளத்தில் தவித்த 14 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு மழை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தாம்பரம் பகுதியில் இன்று மட்டும் 11 இடங்களில் மீட்புபணி நடந்தது. இங்கு  வெள்ளத்தில் தவித்தவர்கள் 24 படகுகளிலும், வேளச்சேரி பகுதியில் 14 படகுகளிலும் ஆக மொத்தம் 38 படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top