மருந்து, உணவு பொருட்களுக்கு வழங்குவதில் தடையை இந்தியா விலக்க வேண்டும்: புதிய பிரதமர் கட்கா பிரசாத் வேண்டுகோள்

எரிபொருள், மருந்து மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதில் நேபாளத்தின் மீது விதித்துள்ள தடை விலக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் புதிய பிரதமர் கட்கா பிரசாத் ஒளி இந்தியாவிடம் கேட்டுகொண்டுள்ளார்.

அறிவிக்கப்படாத ஒரு தடையை நேபாளத்தின் மீது இந்தியா விதித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

நேபாளத்தில் அண்மையில் நடந்த பூகம்பத்தை அடுத்து எழுந்துள்ள மனிதாபிமான நெருக்கடியை இத்தடை மேலும் மோசமாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்கள் வருவதில் எழுந்துள்ள சிரமத்துக்கு தாங்கள் காரணம் அல்ல என்று இந்தியா கூறுகிறது.

ஆனால் நேபாளத்தின் புதிய அரசியல் சாசனத்தால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய அரசாங்கம் நேபாளத்துக்கான பொருள் வரத்தை கட்டுப்படுத்துவதாக நேபாளம் கூறுகிறது.

அண்மையில் நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் வந்தது, இந்திய எல்லையை ஒட்டி வாழும் நேபாள சிறுபான்மையினரிடம் அது கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top