டெல்லியில் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

டெல்லியில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், தனது குடியிருப்பின் பால்கனி பகுதியில் இருந்து மனைவி கீழே குதித்ததை அடுத்து துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்டு பலியாகியுள்ளார்.

டெல்லியின் நொய்டா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் அமித் சிங்.  இவர் டெல்லி காவல் துறையின் சிறப்பு சிறை துறை உதவி ஆணையராக பதவி வகித்து வந்துள்ளார்.  இந்நிலையில், இச்சம்பவத்தை தொடர்ந்து குடியிருப்புவாசிகள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்கள் தம்பதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  அங்கு சிங் இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என போலீசார் கூறியுள்ளனர்.  இந்த முடிவை தம்பதி எடுத்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.  அவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது என போலீசார் கூறியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top