மின்சார ரெயிலில் பாட்டுப்பாடி தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டிய அமிதாப் பச்சன்: வீடியோ இணைப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மும்பை மின்சார ரெயிலில் பாட்டுப்பாடி நிதி திரட்டும் பாடகருடன் அதே நோக்கத்துக்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவருடன் இணைந்து பாட்டுப்பாடி ரெயில் பயணிகளிடம் இருந்து நிதி திரட்டினார்.

மும்பையைச் சேர்ந்த சவுரப் நிம்ப்கர் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மும்பை மின்சார ரெயில்களில் கிட்டார் வாசித்தபடி, பிரச்சார பாட்டுப்பாடி நிதி திரட்டும் அரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதை அறிந்த நடிகர் அமிதாப் பச்சன், அவரது தொண்டுக்கு பலம் சேர்க்கும் வகையில் மும்பை விக்டோரியா ரெயில் நிலையத்தில் இருந்து பன்டூப் நிலையம்வரை அவருடன் இணைந்து ரெயிலில் பயணித்தபடி பாட்டுப்பாடி நிதி திரட்டினார்.

இதுதொடர்பான புகைப்படங்களை தனது ‘பிளாக்’-கில் வெளியிட்டு, தகவல் தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், மின்சார ரெயிலில் சென்று நிதி திரட்டியது ஊடகங்களின் மூலமாக இந்த செய்தி வெளியாகி, நான் விளம்பர வெளிச்சம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல.

நாம் மட்டும் தனியாக இதை செய்து வருகின்றோமே என்று சவுரபைப் போன்று தொண்டாற்றிவரும் நபர்கள் நினைக்காமல் இருப்பதற்காகவும், அவர்களுக்கு பக்கபலமாக எங்களைப் போன்ற பிரபலங்கள் இருக்கின்றார்கள் என மக்கள் புரிந்து கொள்வதற்காகவும் மட்டுமே இதை நான் செய்தேன். எங்களைப்போல் மேலும் பலர் இந்த அரிய நோக்கத்துக்கு இனி பலம் சேர்ப்பார்கள் என நான் நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top