சிலிண்டர் மானியம் ரத்து: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகம்

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்.

36ஆந்திரா மற்றும் தெலங்கானா வர்த்தக பேரவை சார்பில் ஹைதராபாத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் எண்ணற்றோர் எல்பிஜி சிலிண்டர் இணைப்புகளை வாங்கி வைத்திருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் என்னிடம் சமீபத்தில் தெரிவித்தார். இந்த இணைப்புகளை ரத்து செய்வதன் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும் என்றும் கூறியிருந்தார்.

இதன் காரணமாக சட்டவிரோத எல்பிஜி சிலிண்டர் இணைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு வருமானம் பெறும் குடும்பத்துக்கு, அரசின் மானியத் தொகை எதற்கு? அந்த் தொகையை ஏழைகளுக்கு செல்விட அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இதுவரை வசதியானவர்கள், அமைச்சர்கள் என சுமார் 30 லட்சம் பேர் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க இதுவரை 15 துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டு கொள்கையில் 35க்கும் மேற்பட்ட மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது. வளர்ச்சி, சிறந்த நிர்வாகம், வறுமை ஒழிப்பு ஆகிய பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனவே, அரசின் சீர்த்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட முக்கிய மசோதாக் களை நாடாளுமன்றத்தில் நிறை வேற்ற எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும். தெரிந்தோ, தெரியா மலோ ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்து விட்டன. அதை பெரிதுபடுத்தி, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top