இந்தியா சிறப்பான தொடக்கம்: தென்ஆப்பிரிக்கா 214 ரன்னில் சுருண்டது

f9eee2c4-4d5c-47fa-8143-8901cf59e475_S_secvpfஇந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்றதும் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா அசத்தினார்கள். இவர்கள் இருவரும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த, தென்ஆப்பிரிக்கா அணி 214 ரன்னில் சுருண்டது.

100-வது டெஸ்டில் விளையாடிய டி வில்லியர்ஸ் மட்டும் தாக்குப்பிடித்து 85 ரன்கள் குவி்த்தார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் ரபாடா, மோர்னே மோர்கல், அபாட் பந்து வீச்சை தவானும், முரளி விஜயும் தாக்குப்பிடிப்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் டக் அவுட் ஆன தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இந்த விக்கெட்டை தென்ஆப்பிரிக்க வீரர்களால் பிரிக்க முடியவில்லை.

தவான் 45 ரன்களுடனும், முரளி விஜய் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 80 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் கைவசம் 10 விக்கெட்டுக்கள் உள்ளன. 134 ரன்கள்தான் முதல் இன்னிங்சில் பின்தங்கிய நிலையில் உள்ளது. களத்தில் இருக்கும் ஜோடி இன்று காலை சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினால் இந்தியா முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் முன்னிலை பெற வாய்ப்புள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top