சமூக வலைத்தளங்களை கலக்கும் விஜய் ரசிகர்கள்..!

vijay-hot-dad_0

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பல ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களின் பழைய வெற்றியையும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படிப்பட்ட சில படங்களின் வெற்றிகளை சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாது. அந்த மாதிரியான ஒரு படமாக 2012ம் ஆண்டு தீபாவளியன்று வெளிவந்த படம்தான் ‘துப்பாக்கி’. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் முதல் முறையாக இணைந்து உருவான படம். விஜய் எத்தனையோ ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவரை வேறு விதமாக வித்தியாசமாக உயர்த்திக் காட்டியது. விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் கொண்டாட்டமான ஒரு படமாக அமைந்தது.

இந்திய ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றும் விஜய் விடுமுறைக்காக தன் ஊரான மும்பைக்கு வருகிறார். வந்த இடத்தில் நடைபெற்ற ஒரு தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி விஜய் கண்டுபிடிக்கிறார். அதன் தொடர்ச்சியாக அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள ஒரு பெரிய தீவிரவாதக் கும்பலை அவர் எப்படி கண்டுபிடித்து அழிக்கிறார் என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொன்ன படம் இது.

படம் வெளியாகும் சமயத்தில் முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் பின்னர் சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது. 2012ம் வருடத்தில் மிகப் பெரும் வெற்றி பெற்ற படமாக இந்தப் படம் அமைந்தது. இந்தியாவில் மட்டும் மொத்தமாக 180 கோடி ரூபாய் வசூல் ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் ‘ஹாலிடே’ என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் ஆகி அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு மீண்டும் முருகதாஸ் – விஜய் கூட்டணி இணைந்து 2014ல் ‘கத்தி’ என்ற மற்றொருப் படத்தையும் தந்தனர். விஜய்யின் முக்கிய ஹிட் படங்களின் வரிசையில் ‘துப்பாக்கி’ படத்திற்கு தனி இடமுண்டு.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் தங்கள் Profile picture-யை மாற்றி எல்லோரும் ஒரே மாதிரி விஜய் படங்களை வைத்துள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் 3YearsOfBlockbusterThuppakki என இந்திய அளவில் ட்ரண்ட் செய்து சமூக வலைத்தளங்களை கலக்கினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top