2–வது டெஸ்ட் போட்டி: அஸ்வின் பந்து வீச்சில் தென்ஆப்பிரிக்கா திணறல்

0e3bf4bd-f507-4337-a2a2-09c34c082b43_S_secvpfதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை 2–0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3–2 என்ற கணக்கிலும் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

4 டெஸ்ட் தொடரில் மொகாலியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 108 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. உமேஷ்யாதவ், அமித் மிஸ்ராவுக்கு பதிலாக இஷாந்த்சர்மா, ஸ்டூவர்ட்பின்னி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

தென்ஆப்பிரிக்க அணியில் 3 மாற்றம் இருந்தது. ஹார்மர், பிலான்டர், ஸ்டெய்ன் ஆகியோருக்கு பதிலாக டுமினி, மோர்னே மோர்கல், அபோட் இடம் பெற்றனர். இரு அணி வீரர்கள் வருமாறு:–

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), முரளிவிஜய், தவான், புஜாரா, ரகானே, விர்த்திமான்சகா, ரவிந்திர ஜடேஜா, ஸ்டூவர்ட்பின்னி, அஸ்வின், இஷாந்த்சர்மா, வருண் ஆரோன்.

தென்ஆப்பிரிக்கா: ஹசிம் அம்லா (கேப்டன்), எல்கர், வான்ஜில், டுபெலிசிஸ், டிவில்லியர்ஸ், டுமினி, டானே விலாஸ், அபோட், ரபடா, மோர்னே மோர்கல், இம்ரான் தாகீர்.

இந்திய அணி கேப்டன் வீராட் கோலி ‘டாஸ்’ வென்று தென்ஆப்பிரிக்காவை முதலில் விளையாட அழைத்தார். எல்கரும், வான்ஜில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

8–வது ஓவரை வீச அஸ்வின் அழைக்கப்பட்டார். அவர் தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். வான்ஜில் 10 ரன்னில் எல்.பி.டபிள்யூ ஆனார். 2–வது பந்தில் அவர் வெளியேறினார்.

அஸ்வினின் 5–வது பந்தில் டுபெலிசிஸ் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்தார். அவர் ரன் எதுவும் எடுக்கவில்லை. 15 ரன்னில் தென்ஆப்பிரிக்கா 2 விக்கெட்டை இழந்தது.

3–வது விக்கெட்டுக்கு எல்கருடன் கேப்டன் அம்லா ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியை வருண் ஆரோன் பிரித்தார். அம்லா 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்னாக இருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top