தமிழகத்தின் வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்

rain6தமிழத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் கரை கடந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நண்பகலில் வேலூருக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது. இதனால், வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நெய்வேலியில் 48 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மழை காரணமாக கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top