பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் சுமுக உறவையே இந்தியா விரும்புகிறது: ராஜ்நாத் சிங் பேட்டி

rajnathபாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் சுமுக உறவையே இந்தியா விரும்புகிறது என்றும் தனது அண்டை நாடுகளுடனான சுமுக உறவு தொடர்ந்து மேம்பட அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கூறியுள்ளார்.

தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பாகிஸ்தான் நமது அண்டை நாடு.  அந்நாட்டுடன் சுமுக உறவையே நாம் விரும்புகிறோம்.

ஆனால் பாகிஸ்தானும் பதிலுக்கு அதனையே விரும்ப வேண்டும் என கூறியுள்ளார்.  அதனுடன், நேபாளத்துடனும் மிக நல்ல உறவையே நாம் விரும்புகிறோம்.  நமது அண்டை நாடுகளுடனான நமது உறவு மேம்பட அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம் என அவர் கூறியுள்ளார்.  ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் வேற்றுமை நிலவுகிறதா? என கேட்கப்பட்டதற்கு, மாநிலத்தில் கூட்டணி தொடரும்.  அதற்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top