தீபாவளிக்கு ஊருக்கு செல்ல கோயம்பேட்டில் குவிந்த பயணிகள்: உணவு விலை அதிகம் என குற்றச்சாட்டு

12CMDA.jpg.crop_display_0தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு ஏராளமானோர் குவிந்தனர்.

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கடந்த ஆறாம் தேதி முதல் நாளை வரை 11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நேற்று வார விடுமுறை நாள் என்பதால் 1,717 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்தனர். பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் புறப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கோயம்பேடு, வடபழனி, வானகரம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக பேருந்துகள் இயக்கபட்டாலும் தேவை அதிகம் உள்ள பகுதிகளுக்கு குறைந்த பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், உணவுப் பொருட்களின் விலை அதிமாக உள்ளதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் போக்குவரத்திற்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு நடத்தினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top