தமிழ் பெண்களை சித்திரவதை செய்யும் இலங்கை ராணுவத்தினர்: புதிய வீடியோ ஆதாரம்!

srilankan military abuse tamil ladiesபயிற்சி எனும் பெயரில் இலங்கை ராணுவத்தினர் தமிழ் பெண்களை கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்யும் புதிய காணொளிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இலங்கை ராணுவத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள தமிழ் பெண்களுக்கு அங்குள்ள ராணுவ முகாம்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அங்கு பயிற்சி பெறும் தமிழ் பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினர் இரக்கமற்ற முறையில் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

உடற்பயிற்சியின் போது சிறிய தவறு செய்தாலும் தமிழ் பெண்கள் தடிகளால் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. நிலத்தில் தவழ்ந்து செல்லும் பயிற்சியில் ஈடுபடும் தமிழ் பெண்களை தடிகளுடன் பின் தொடரும் படை அதிகாரிகள் சரமாரியாக தாக்குகின்றனர்.

இலங்கை ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் பெண்கள் பலர் உயர் ராணுவ அதிகாரிகளால் பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கப்படும் கொடுமை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது தமிழ் பெண்கள் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இத்தனை கொடூரத்திற்கு பிறகும் சர்வதேசம் ஏன் அம்மக்களை ஒன்றுபட்டு வாழ வற்புறுத்துகிறது? அங்கு தமிழர்கள் குறைந்தபட்ச நிம்மதியுடன் கூட வாழ இயலாத சூழலில் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றே ஒரே தீர்வாக இருக்க முடியும் இதற்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் வழிவகை செய்யவேண்டும் என மனித உரிமை செயல்பாட்டாளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top