நல்லிணக்க ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழுவால் பலன் கிடைக்காது; ஈழத்தமிழர்கள்

150830142744_mannar_sri_lanka_missing_people_512x288_bbc_nocreditஇலங்கையில் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ள போதிலும், அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த விசாரணையின் மூலம் நீதி கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலர் இதுவரை காலமும் காணாமல் போனவர்கள் தொடர்பில் உறுதியான தகவல் எதனையும் தெரிவிக்காமல் இருப்பது குறிதது கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.

நல்லிணக்க ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு என்று விசாரணை குழுக்களிடம சாட்சியமளித்தும், இறுதியில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டார்கள்.

இறுதி யுத்தத்ததின்போது அரசாங்கத்தின் உறுதிமொழியை நம்பி இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்களின் உறவினர்களை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்ததே இல்லை என தெரிவித்த தாயார் ஒருவர், இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மீண்டும் விசாரணை நடத்துவதில் எந்தவிதப் பயனும் இல்லை என காணாமல் போயுள்ள ஒருவரின் தாயார் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளில் பயன் ஏற்படாதபோது இனிமேலும் விசாரணை நடத்துவதில் பயன் கிடைப்பது சந்தேகமே என்று மற்றுமொரு பெண்மணி கூறுகின்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top