வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

low-pressure-areaதென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு காற்றுச்சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை இரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்குச்செல்லவேண்டாம் என்று எச்சரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top